வியாழன், 23 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: சனி, 29 ஜூலை 2023 (10:02 IST)

மரகத நாணயம் படத்தில் இணையும் பிரபல நடிகர்கள்… அப்டேட் கொடுத்த இயக்குனர்!

ஆதி, நிக்கி கல்ரானி, ஆனந்த் ராஜ், ராம்தாஸ் நடிப்பில், ஏ.ஆர்.கே. சரவணன் இயக்கியிருந்த படம் ‘மரகத நாணயம்’. தெலுங்கு காமெடி நடிகரான பிரம்மானந்தம், சிறிய கேரக்டரில் நடித்திருந்தார். மொக்கை போடும் பேய்ப் படங்களுக்கு நடுவில், வயிறு வலிக்க சிரிக்க வைத்தது இந்தப் படம். அதனால், பாக்ஸ் ஆபிஸில் ஹிட்டாகி, வசூலையும் குவித்தது.

அதையடுத்து ஆதி நடித்த வீரன் என்ற திரைப்படத்தை இயக்கினார். அந்த படம் சமீபத்தில் ரிலீஸாகி கலவையான விமர்சனங்களைப் பெற்றது. இந்நிலையில் நீண்டகாலமாக மரகத நாணயம் படத்தின் இரண்டாம் பாகம் பற்றிய தகவல்கள் வெளிவந்த வண்ணம் உள்ளன. இதையடுத்து இப்போது அந்த படத்தின் இரண்டாம் பாகம் உருவாகி வருவதாக இயக்குனர் ஏ ஆர் கே சரவன் தன்னுடைய சமூகவலைதளப் பக்கத்தில் சில தினங்களுக்கு முன்னர் அறிவித்திருந்தார்.

இந்நிலையில் இப்போது படம் பற்றி மேலும் சில தகவல்கள் வெளியாகியுள்ளன. இராண்டாம் பாகத்தில் முதல் பாகத்தில் நடித்த நடிகர்களே தொடர்வார்கள் என்று இயக்குனர் தரப்பு கூறியுள்ளனர். மேலும் சில புதிய நடிகர்களும் படத்தில் இணைவார்கள் என சொல்லப்படுகிறது. படம் டிசம்பரில் தொடங்கி அடுத்த ஆண்டு கோடை விடுமுறைக்கு ரிலீஸாகும் என சொல்லப்படுகிறது.