1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: செவ்வாய், 24 நவம்பர் 2020 (17:06 IST)

இயக்குனர் மற்றுமே மாற்றம்… மற்ற கலைஞர்கள் எல்லாம் அப்படியே – விஜய் 65 அப்டேட்!

விஜய் நடிக்கும் அவரின் 65 ஆவது படத்தின் ஒளிப்பதிவாளராக மனோஜ் பரமஹம்சா ஒப்பந்தம் ஆகியுள்ளார்.

தளபதி விஜய் நடிப்பில் சன் பிக்சர்ஸ் நிறுவனம் பிரம்மாண்டமாக தயாரிக்க இருக்கும் திரைப்படத்தை பிரபல இயக்குநர் ஏஆர் முருகதாஸ் அவர்கள் இயக்க இருந்தார். ஆனால் சில காரணங்களால் அவர் வெளியேறி இப்போது கோலமாவு கோகிலா புகழ் நெல்சன் இயக்க உள்ளார்.

இந்நிலையில் இந்த படத்தில் ஒளிப்பதிவாளராக பணியாற்ற மனோஜ் பரமஹம்சா ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இவர் முருகதாஸ் இருக்கும் போதே படத்தை இயக்க ஒப்பந்தம் ஆனார். விஜய் படத்துக்காக பிரபாஸின் ராதே ஷ்யாம் படத்தில் இருந்து வெளியேறினார் என்பது குறிப்பிடத்தக்கது. அதனால் அவரையே ஒளிப்பதிவாளராக இப்போதும் நியமித்துள்ளனர். அதே போல நெல்சனின் ஆஸ்தான இசையமைப்பாளரான அனிருத்துக்குப் பதிலாக முன்னதாகவே ஒப்பந்தம் ஆன தமனே இசையமைப்பாளராக தொடர உள்ளார்.