வியாழன், 26 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Modified: செவ்வாய், 24 நவம்பர் 2020 (16:49 IST)

விஜய்-65 வது படத்தின் இயக்குநர் இவர்தான்??? தளபதி ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி

நடிகர் விஜய்யின் 65 வது படத்தை இயக்கப்போவது யார் என்ற எதிர்ப்பார்ப்பு அவரது ரசிகர்களிடையே அதிக எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்திய நிலையில் ஏ ஆர் முருகதாஸ் – விஜய் கூட்டணி மீண்டும்  இணையும் என சன்பிக்சர்ஸ் தயாரிப்பு நிறுவனம் அறிவித்தது.

ஆனால் முருகதாஸின் ஸ்கிரிப்ட் திருப்தி இல்லாததால் விஜய் அவரை நிராகரித்ததாகவும் தகவல் வெளியானது.

இதையடுத்து டாக்டர் படத்தை இயக்கியுள்ள நெல்சன் தான் விஜய்யின் அடுத்த படத்தை இயக்கவுள்ளதாகத்தகவல் வெளியானது.

இதற்கிடையே பிரபல இயக்குநரும் நடிகருமான எஸ்.ஜே.சூர்யா கூறிய கதை சன் பிக்சர்ஸுக்குப் பிடித்துவிட்டதாகவும் அதனால் விஜய் -65 வது படத்தை எஸ்.ஜே. சூர்யா இயக்கவுள்ளதாகவும் கோலிவுட் வட்டாரத்தில் பேச்சு எழுகிறது.

இவர்கள் கூட்டணி ஏற்கனவே பல ஆண்டுகளுக்கு முன் வெளியான குஷு படம் சூப்பர் ஹிட் வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.

விஜய்யின் மாஸ்டர் படம் விரையில் ரிலீஸாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.