திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By mahendran
Last Modified: புதன், 4 ஆகஸ்ட் 2021 (09:51 IST)

இசைமைப்பாளராக அறிமுகம் ஆகும் மணிஷர்மா மகன்!

வேதாளம் படத்தின் தெலுங்கு ரீமேக்கில் நடிகை லட்சுமி மேனன் கதாபாத்திரத்தில் கீர்த்தி சுரேஷ் நடிக்க உள்ளதாக சொல்லப்படுகிறது.

அஜித், ஸ்ருதிஹாசன் மற்றும் லட்சுமி மேனன் நடிப்பில் சிறுத்தை சிவா இயக்கிய ‘ வேதாளம்’ திரைப்படம் கடந்த 2015ஆம் ஆண்டு கமல்ஹாசனின் தூங்காவனம் என்ற படத்துடன் வெளிவந்து மிகப் பெரிய வெற்றி பெற்றது என்பதும் தெரிந்ததே. இந்த நிலையில் இந்த படத்தின் தெலுங்கு ரீமேக் தற்போது தயாராகி வருகிறது. அஜித் நடித்த வேடத்தில் தெலுங்கு சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவி நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கவுள்ளது.

இந்த படத்தில் லட்சுமி மேனன் நடித்த தங்கை கேரக்டரில் நடிக்க சாய்பல்லவி ஒப்பந்தமாகி இருப்பதாக தகவல்கள் வெளியாகின. ஆனால் இப்போது அந்த கதாபாத்திரத்தில் கீர்த்தி சுரேஷ் நடிக்க உள்ளதாக சொல்லப்படுகிறது. மேலும் ஒரு முக்கிய அப்டேட்டாக இந்த படத்துக்கு தெலுங்கு சினிமாவின் முன்னணி இசையமைப்பாளரான மணிஷர்மாவின் மகன் முதன் முதலாக இசையமைக்க உள்ளாராம்.