1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By papiksha joseph
Last Modified: செவ்வாய், 16 மே 2023 (16:02 IST)

மணிமேகலை கர்ப்பமாக இருக்கிறா? மீண்டும் வைரலாகும் வீடியோ!

பிரபல தொகுப்பாளினி மணிமேகலை சன் மியூசிக் தொலைக்காட்சியில் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி இளசுகள் மத்தியில் பிரபலமடைந்தார். கடந்த 2017ம் ஆண்டு பெற்றோர் சம்மதமின்றி நடன இயக்குனரான காதர் ஹுசைனை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களின் காதலுக்கு வீட்டில் சம்மதம் தெரிவிகத்ததால் தற்போது கணவருடன் தனியாக வசித்து வந்தார்.
 
இதனிடையே  கொரோனா வைரஸ் ஊரடங்கு சமயத்தில் கிராம குழந்தைகளுடன் விளையாடுவது, கொரோனா வைரஸ் குறித்து விழிப்புணர்வு கருத்தை தெரிவிப்பது என படு பேமஸ் ஆனார். இதன் மூலம் அவரது யூடியூபிற்கு மளமளவென வியூஸ் அதிகரித்தது. 
 
பின்னர் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டு பேமஸ் ஆனார். இதனிடையே திடீரென அந்த நிகழ்ச்சியில் இருந்து வெளியேறியதால் அவர் கர்ப்பமாக இருக்கிறார் என செய்திகள் வெளியானது. ஆனால் அதை மணிமேகலை ஒப்புக்கொள்ளவில்லை. இந்நிலையில் தற்போது அவர் வெளியிட்டுள்ள புதிய வீடியோ ஒன்றிலும் குண்டாக கர்ப்பமாக இருப்பது போன்று உள்ளார். இதனால் அவர்  நிச்சயம் கர்ப்பமாக தான் இருக்கிறார் என எல்லோரும் கூறி வருகின்றனர்.