புதன், 18 செப்டம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Mahendran
Last Modified: திங்கள், 27 நவம்பர் 2023 (19:04 IST)

மாமன்னன் உதவி இயக்குநர் மூச்சுத்திணறலால் உயிரிழப்பு..! 30 வயதில் சோகம்..!

மாமன்னன் படத்தில் உதவி இயக்குனராக பணிபுரிந்த மாரிமுத்து என்பவர் திடீரென ஏற்பட்ட மூச்சு திணறல் காரணமாக உயிர் இழந்ததாக கூறப்படும் தகவல் பெறும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 
 
உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவான திரைப்படம் மாமன்னன். இந்த படத்தில் உதவி இயக்குனராக மாரிமுத்து என்பவர் பணிபுரிந்த நிலையில் அவருக்கு திடீரென மூச்சு திணறல் ஏற்பட்டதாக தெரிகிறது. 
 
அவர் சிகரெட் அதிகமாக பிடித்ததால் மூச்சு திணறல் ஏற்பட்டு இருக்கலாம் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இந்த நிலையில் மூச்சு திணறல் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர்  சிகிச்சை பலனின்று உயிர் இழந்ததாக செய்தி வெளியாகியுள்ளது. 
 
மாரி செல்வராஜ் இயக்கிய கர்ணன் படத்திலும் மாமன்னன் படத்திலும் உதவி இயக்குனராக பணிபுரிந்த மாரிமுத்து, தனியாக படம் இயக்க திட்டமிட்டு இருந்த நிலையில் திடீரென உயிரிழந்தது அவரது குடும்பத்தினர்களை அதிர்ச்சி அடைய செய்துள்ளது.
 
Edited by Mahendran