1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Siva
Last Modified: வெள்ளி, 9 டிசம்பர் 2022 (20:51 IST)

நடிகை கெளதமிக்கு டாக்டர் பட்டம்.. வெளிநாட்டு பல்கலைகழகம் கெளரவம்!

கவுதமி
தமிழ் திரையுலகில் ரஜினி கமல் உள்பட பல முன்னணி நடிகர்களுடன் நடித்தவர் கவுதமி என்பதும் தற்போது அவர் தீவிர அரசியலில் உள்ளார் என்பதும் தெரிந்ததே. 
 
பாஜகவில் முக்கிய புள்ளியாக இருக்கும் கௌதமிக்கு மலேசிய பல்கலைக்கழகம் கௌரவ டாக்டர் பட்டம் அளித்து உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது 
 
இதனை அடுத்து இது குறித்த புகைப்படங்களை கவுதமி தனது சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள நிலையில் அந்த புகைப்படங்கள் வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது
 
பாஜகவில் இருக்கும் நடிகை கவுதமி டாக்டர் பட்டம் குறித்து கூறியபோது, தனக்கு கிடைத்த இந்த டாக்டர் பட்டம் குறித்து மகிழ்ச்சி என்றும், பல்கலைக்கழக நிர்வாகிகளுக்கு எனது நன்றி என்றும் தெரிவித்துள்ளார்.
 
Edited by Siva