மலையாள நடிகர் இன்னோசண்ட் மரணம்… திரையுலகினர் அஞ்சலி!
மலையாள் சினிமாவின் மூத்த நடிகர்களில் ஒருவரான இன்னொசண்ட் நேற்று காலமானார். அவருக்கு வயது 75. கடந்த சில ஆண்டுகளாகவே தொண்டைப் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு அதற்காக சிகிச்சை எடுத்து வந்த இன்னோசண்ட் கடந்த சில வாரங்களாக அபாயக் கட்டத்தில் இருப்பதாக தகவல்கள் வெளியாகின. இந்நிலையில் அவரின் மறைவு ஒட்டுமொத்த மலையாள திரையுலகையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. அவருக்கு சக நடிகர் மற்றும் மலையாள சினிமா கலைஞர்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
இன்னொசண்ட் நடிகராக மட்டும் இல்லாமல் அரசியலிலும் இறங்கி பாராளுமன்ற உறுப்பினராக இருந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.