டான்ஸ் ஆடும் விஜயகாந்த்?; இணையத்தில் வைரலாகும் வீடியோ
திரைப்படங்கள் மூலம் மக்களைக் கவர்ந்த நடிகர் விஜயகாந்த். இவர் கடந்த 2005 செப்டம்பர் 14-ம் தேதி மதுரையில் தேமுதிகவை தொடங்கினார்.
தேமுதிக தலைவர் விஜயகாந்துக்கு மக்கள் மத்தியில் நல்ல அபிமானமும், நற்பெயரும் உள்ளது. இந்நிலையில் அவர் திரைப்படங்களில் நடிப்பதை நிறுத்தி பல வருடங்கள் ஆகிறது. இவர் எப்போது அரசியலில் நுழைந்தாரோ, அப்போதே நடிப்பதை நிறுத்தி விட்டார்.
தேமுதிக கடந்த தேர்தல்களில் பல ஏற்ற, இறக்கங்களை சந்தித்துள்ளது. இந்நிலையில் சமீபத்தில் இவர் மிகவும் உடல்நலம் முடியாமல் இருந்தார், பிறகு அமெரிக்கா சென்று சிகிச்சை மேற்க்கொண்டு இந்தியா திரும்பினார். சிகிச்சைக்குப் பிறகு ஓய்வில் இருக்கும் விஜயகாந்த், முக்கிய நிகழ்ச்சிகளில் மட்டுமே பங்கேற்கிறார்.
விஜயகாந்ததின் செயல்பாடுகள் முன்பு போல இல்லை என்ற வருத்தம், அவருடைய ரசிகர்கள் மத்தியில் இருந்து வருகிறது. சரி, இது ஒரு புறம் இருந்தாலும் தற்போது அப்படியே விஜயகாந்த் போலவே இருக்கும் ஒருவர், டான்ஸ் ஆடும் வீடியோ இணையத்தில் வேகமாக பரவி வருகின்றது.