1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Siva
Last Modified: வெள்ளி, 24 பிப்ரவரி 2023 (18:20 IST)

சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியிலிருந்து மாகாபா நீக்கமா? பிக்பாஸ் பிரபலம் தான் புதிய தொகுப்பாளர்?

Makapa
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சூப்பர் சிங்கர் என்ற நிகழ்ச்சியை மாகாபா மற்றும் பிரியங்கா தொகுத்து வழங்கி வரும் நிலையில் இந்த நிகழ்ச்சியில் இருந்து மாகாபா நீக்கப்பட்டதாகவும் அவருக்கு பதிலாக பிக்பாஸ் பிரபலம் ஒருவர் தொகுத்து வழங்க இருப்பதாகவும் கூறப்படுகிறது. சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி 9 வது சீசன் விரைவில் தொடங்க இருக்கும் நிலையில் இந்த சீசனின் ப்ரோமோ வீடியோ வெளியாகி உள்ளது. அதில் பிரியங்காவுடன் சேர்ந்து பிக் பாஸ் பிரபலமான ரியோ ராஜ் தொகுத்து வழங்குவது போன்ற காட்சிகள் உள்ளன. இதனை அடுத்து சூப்பர் சிங்கர் நிகழ்ச்சிகளில் இருந்து மாகாபா நீக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. 
 
மாகாபா இந்த நிகழ்ச்சியை காமெடியாக நடத்தி வந்தாலும் அவர் ஒரு சில சமயம் இரட்டை அர்த்தங்களிலும் ஆபாசமாக பேசுவதாகவும் போட்டியாளர்களை மரியாதை இன்றி பேசுவதாகவும் குற்றம் சாட்டப்பட்டது. இந்த நிலையில் தற்போது திடீரென அவர் நீக்கப்பட்டுள்ளதை அடுத்து பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 
 
பிரியங்கா உடன் சேர்ந்து ரியோராஜ் இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவது உறுதி செய்யப்பட்டுள்ளதை அடுத்து ரியோ ராஜ் இந்த நிகழ்ச்சியை எப்படி தொகுத்து வழங்குவார் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
 
Edited by Siva