1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Cauveri Manickam (Abi)
Last Updated : செவ்வாய், 4 ஜூலை 2017 (19:35 IST)

தமிழில் டப்பிங் பேசும் தெலுங்கு நடிகர்

தெலுங்கு நடிகரான மகேஷ் பாபு, தமிழிலும் உருவாகிவரும் ‘ஸ்பைடர்’ படத்துக்கு தானே டப்பிங் பேச இருக்கிறார்.


 

 
ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் மகேஷ் பாபு நடித்துவரும் படம் ‘ஸ்பைடர்’. கிட்டத்தட்ட பெரும்பாலான படப்பிடிப்பு முடிந்துள்ள நிலையில் இந்தப் படம், செப்டம்பர் மாதம் ரிலீஸாக இருக்கிறது. மகேஷ் பாபு ஜோடியாக ரகுல் ப்ரீத்சிங் நடிக்கிறார். ஹாரிஸ் ஜெயராஜ், இந்தப் படத்துக்கு இசையமைக்கிறார். உளவுத்துறை அதிகாரியாக மகேஷ் பாபு நடிக்கும் இந்தப் படம், ஒரே நேரத்தில் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் உருவாகிறது.
 
இதுதான் மகேஷ் பாபுவின் நேரடி முதல் தமிழ்ப் படம். இருந்தாலும், தானே தமிழில் டப்பிங் பேசப் போகிறார் மகேஷ் பாபு. என்னதான் ஆந்திராவாக இருந்தாலும், மகேஷ் பாபு பிறந்து, வளர்ந்தது எல்லாமே சென்னையில்தான். எனவே, தமிழ் அவருக்கு அத்துபடியாக இருப்பதால், தானே டப்பிங் பேசுவதாகக் கூறிவிட்டாராம்.