செவ்வாய், 28 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: செவ்வாய், 11 ஆகஸ்ட் 2020 (17:37 IST)

தல தளபதி ரசிகர்களை விட வெறித்தனமான ரசிகர்களா இந்த நடிகருக்கு – பிறந்தநாளுக்கு டிவிட்டரில் சாதனை!

நடிகர் மகேஷ்பாபுவின் பிறந்தநாளன்று அதைக் கொண்டாடும் விதமாக 60 லட்சம் டிவீட்கள் பகிரப்பட்டுள்ளன.

தமிழ் சினிமாவை பொறுத்தவரை வசூலில் எப்படி அஜித் மற்றும் விஜய் முன்னிலையில் உள்ளனரோ அதேபோல சமூகவலைதளங்களிலும் இவ்விரு நடிகர்களின் ரசிகர்களும் அதிகளவில் ஆதிக்கம் செலுத்தி வருகின்றன. சம்மந்தப்பட்ட நடிகர்களின் பட ரிலிஸ் மற்றும் பிறந்தநாள் ஆகிய நாட்களில் டிவிட்டரில் ஹேஷ்டேக் உருவாக்கி ட்ரண்ட் செய்வார்கள். சமீபத்தில் ஜூன் 22 ஆம் தேதி நடிகர் விஜய்யின் பிறந்த்நாள் கொண்டாடப்பட்டதை அடுத்து அவரது ரசிகர்கள் 10 லட்சம் ட்வீட்களை பகிர்ந்து சாதனைப் படைத்தனர்.

ஆனால் சமீபத்தில் தெலுங்கு நடிகர் மகேஷ் பாபுவின் பிறந்தநாள் கொண்டாடப்பட்ட நிலையில் அவரது ரசிகர்கள் 60 லட்சம் டிவீட்களை பகிர்ந்து சாதனை படைத்துள்ளனர். விஜய் பிறந்தநாளுக்கு பகிரப்பட்ட டிவீட்களை விட இது 6 மடங்கு அதிகம்.