மகான் திரைப்படத்தில் துருவ் விக்ரம் ஸ்மார்ட் லுக்! – வைரலாகும் போஸ்டர்!
கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் விக்ரம், துருவ் விக்ரம் நடித்து வரும் மகான் படத்தின் புதிய போஸ்டர் வெளியாகியுள்ளது.
தமிழ் சினிமா நடிகர் விக்ரம் மற்றும் அவரது மகன் துருவ் விக்ரம் இணைந்து நடிக்கும் முதல் படம் மகான். இந்த படத்தை கார்த்திக் சுப்புராஜ் இயக்குகிறார். இந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார்.
இந்த படத்தில் துருவ் விக்ரமின் கேரக்டர் போஸ்டர் இன்று வெளியாகியுள்ளது, இந்த படத்தில் துருவ் விக்ரமின் கதாப்பாத்திரத்தின் பெயர் தாதா என கூறப்பட்டுள்ளது, இந்த போஸ்டர் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.