மகாபாரதம்.... பிரபுதேவாவின் மெகா விருப்பம்

மகாபாரதம்.... பிரபுதேவாவின் மெகா விருப்பம்


Sasikala| Last Modified சனி, 11 ஜூன் 2016 (12:33 IST)
இயக்குனராக இருந்த பிரபுதேவா தயாரிப்பாளராகவும், நடிகராகவும் மாறியிருக்கிறார்.

 


ஜெயம் ரவி, அரவிந்த்சாமி, ஹன்சிகா நடித்துவரும், போகன் படத்தை தயாரிப்பவர், ஏ.எல்.விஜய் இயக்கும் தேவி படத்தில் நாயகனாக நடிக்கிறார். தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் தேவி தயாராகிறது.
 
பிரபுதேவா என்றால் கமர்ஷியல் படங்களே நினைவுக்கு வரும். அவரது மனதுக்குள் ஒரு கிளாசிக் திரைப்படம் புதைந்து கிடக்கிறது. 
 
பீட்டர் ஜாக்சன் இயக்கத்தில் வெளியான லார்ட் ஆஃப் த ரிங்ஸ் சீரிஸின் மூன்று பாகங்களும் உலக அளவில் சூலை குவித்த படங்கள். மிடில் எர்த் என்ற கற்பனையான உலகை வைத்து, டோல்கின் எழுதிய நாவலை தழுவி இந்தப் படங்கள் எடுக்கப்பட்டன. தொழில்நுட்பத்தில் வியக்க வைத்த இந்தப் படங்களைப் போன்று மகாபாரதத்தை படமாக எடுக்க வேண்டும் என்ற தாளாத விருப்பத்துடன் இருக்கிறார் பிரபுதேவா. 
 
லார்ட் ஆஃப் த ரிங்ஸ் சீரிஸில் வெளியான மூன்று படங்களும் பல நூறு கோடி செலவில் எடுக்கப்பட்டவை. பிரபுதேவாவுக்கு தனது கனவை நனவாக்க இப்போது சிக்கலாக இருப்பதும் இந்தப் பட்ஜெட்தான்.
 


இதில் மேலும் படிக்கவும் :