வியாழன், 23 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: சனி, 23 ஜூலை 2022 (09:53 IST)

“சிம்புவுக்காக வந்தோம்… ஏமாத்திட்டாங்க…” மஹா திரைப்படம் பார்த்து தெறித்து ஓடும் ரசிகர்கள்!

ஹன்சிகாவின் 50 ஆவது படமான மஹா ஜூலை 22 ஆம் தேதி நேற்று ரிலீஸ் ஆனது. இந்த படத்தில் சிம்பு கௌரவ வேடத்தில் நடித்திருப்பதால் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு நிலவியது.

ஒரு காலத்தில் தமிழ் சினிமாவில் மிகவும் பிசியான கதாநாயகியாக வலம் வந்து கொண்டிருந்தார் ஹன்சிகா மோத்வானி. ஆனால் ஒரு கட்டத்தில் அவருக்கான வாய்ப்புகள் குறைய ஆரம்பித்தன. இந்நிலையில் கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள படமான மஹாவில் நடிக்க அவர் ஒப்பந்தமானார்.  இந்த படத்தில் அவரது முன்னாள் காதலரான சிம்பு சிறப்புத்தோற்றத்தில் நடித்துள்ளார். இந்த திரைப்படம் நேற்று ரிலீஸ் ஆனது. மாநாடு வெற்றிக்குப் பிறகு சிம்பு நடிப்பில் ரிலீஸாகும் படமாக மஹா அமைந்தது.

இந்நிலையில் நேற்று படம் வெளியானது முதல் மோசமான விமர்சனங்களை சந்தித்து வருகிறது. பல சிம்பு ரசிகர்கள் அவருக்காக படம் பார்க்க வந்து ஏமாந்து போனதாக சமூகவலைதளங்களில் தங்கள் ஆதங்கத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். மோசமான திரைக்கதை காரணமாக படம் எதிர்மறை விமர்சனங்களை சந்தித்து வருவது குறிப்பிடத்தக்கது.