ஞாயிறு, 29 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sugapriya Prakash
Last Updated : வெள்ளி, 10 மார்ச் 2017 (17:19 IST)

மடோனாவையும் முடக்கிட்டாங்கப்பா!!

பிரபலங்களின் பேஸ்புக், ட்விட்டர் கணக்குகளை முடக்குவதற்கென்றே ஒரு கும்பல் அலைகிறது. 


 

பிரபலங்களின் ட்விட்டர் கணக்கை முடக்கி, அவர்கள் பெயரில் அவதூறு செய்திகளை வெளியிட்டு சம்பந்தப்பட்டவர்களை சங்கடத்தில் தெறிக்கவிடுவது இந்த கும்பலின் வாடிக்கை.
 
நடிகை மடோனா செபாஸ்டினின் ட்விட்டர் கணக்கை யாரோ முடக்கியிருக்கிறார்கள். பாவனா பாலியல் தொல்லைக்கு உள்ளான விவகாரத்தில் கடுமையான கருத்துகளை மடோனா தெரிவித்திருந்தார். இந்நிலையில் அவரது ட்விட்டர் கணக்கும் முடக்கப்பட்டுள்ளது. கூடவே அவரது பெயரில் போலி அக்கவுண்டும் திறக்கப்பட்டுள்ளது.
 
என்னுடைய பெயரில் யாராவது எதையாவது வெளியிட்டால் அதை நம்பாதீங்க என்று மடோனா அறிவித்துள்ளார்.