மாதவனும் கமலுக்கு ‘நோ’ சொல்லிவிட்டாராம்…
கமலின் ‘பிக் பாஸ்’ நிகழ்ச்சியில் கலந்துகொள்ள மாதவனும் ‘நோ’ சொல்லிவிட்டாராம்.
கமல் தொகுத்து வழங்கும் ‘பிக் பாஸ்’ நிகழ்ச்சி, விஜய் டிவியில் ஒளிபரப்பாக இருக்கிறது. 15 பிரபலங்களை, எந்த வெளியுலகத் தொடர்பும் இல்லாதபடி ஒரு வீட்டில் அடைத்து விடுவர். 24 மணி நேரமும் கேமரா அவர்களைக் கண்காணிக்கும். கமல் மட்டும் அவ்வப்போது அவர்களைச் சந்திப்பார். இப்படி 100 நாட்கள் யார் இருக்கிறார்களோ, அவர்களே வெற்றியாளர்கள்.
இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ள ‘பவர் பாண்டி’ ராஜ்கிரணிடம் நிகழ்ச்சி தயாரிப்பாளர்கள் கேட்டபோது, அவர் மறுத்துவிட்டாராம். இத்தனைக்கும் பெரும் தொகை ஒன்றும் தருவதாகச் சொன்னார்களாம். ஆனாலும், ராஜ்கிரண் மசியவில்லை. இந்நிலையில், இந்த நிகழ்ச்சியில் நீங்கள் கலந்து கொள்வீர்களா? என மாதவனிடம் பத்திரிகை நிருபர் ஒருவர் கேட்டதற்கு, ‘இது எனக்கு விருப்பமில்லாத ஒன்று. நிச்சயம் இதில் கலந்துகொள்ள மாட்டேன்’ எனத் தெரிவித்துள்ளார் மாதவன்.