புதன், 11 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: புதன், 11 டிசம்பர் 2024 (08:57 IST)

ராகவா லாரன்ஸின் ‘பென்ஸ்’ படத்தில் இணையும் மாதவன்..!

லோகேஷ் கனகராஜ் கதை மற்றும் தயாரிப்பில் உருவாகும் ராகவா லாரன்ஸ் நடிக்கும் ‘பென்ஸ்’ திரைப்படத்தை பாக்யராஜ் கண்ணன் இயக்க இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே ரெமோ மற்றும் சுல்தான் படங்களை இயக்கிய நிலையில் தற்போது மூன்றாவது படமாக பென்ஸ் படத்தை பாக்யராஜ் கண்ணன் இயக்க உள்ளார். சாய் அப்யங்கர் இசையமைப்பாளராக அறிமுகமாகவுள்ளார்.

இந்த படத்தை முதலில் லோகேஷின் நண்பரான ரத்னகுமார்தான் இயக்க இருந்தார். அதன் பின்னர் இயக்குனர் மாற்றம் நடந்துள்ளது. படத்தின் திரைக்கதைப் பணிகள் முடிந்துள்ள நிலையில் இந்த படத்தை தன்னுடைய எல் சி  யு உலகத்தில் இணைக்க லோகேஷ் முடிவு செய்துள்ளதாக சொல்லப்படுகிறது.

இந்த படம் அறிவிக்கப்பட்டு பல மாதங்கள் ஆனபின்னரும் இன்னும் ஷூட்டிங் தொடங்கவில்லை. இந்நிலையில் படத்தில் ஒரு பிரதான வேடத்தில் நடிக்க மாதவனிடம் படக்குழு பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் சொல்லப்படுகிறது. அவர் நடிக்க சம்மதம் தெரிவித்துள்ளதாகவும் விரைவில் ஷூட்டிங் தொடங்கவுள்ளதாகவும் சொல்லப்படுகிறது.