1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: புதன், 20 நவம்பர் 2024 (09:21 IST)

கங்குவாவைக் காப்பாற்ற முயலும் திரையுலக பிரபலங்கள் வரிசையில் மாதவன்!

சூர்யா நடிப்பில் கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக உருவாக்கத்தில் இருந்த ‘கங்குவா’ திரைப்படம்  கடந்தவாரம் உலகம் முழுவதும் அதிகளவிலான திரையரங்குகளில் ரிலீஸாகி மிக மோசமான விமர்சனங்களையும் கேலிகளையும் எதிர்கொண்டு வருகிறது.

இதற்குப் பல காரணங்கள் சொல்லப்பட்டாலும் மிக முக்கியமானக் காரணமாக ஒன்றை சொல்லலாம். படம் ரிலீஸாவதற்கு முன்பே படத்தைப் பற்றி படக்குழுவினர் கொடுத்த ஓவர் பில்டப்தான் அது. செல்லும் மேடைகளில் எல்லாம் அவர்கள் ஆற்றிய புகழுரைகள் ரசிகர்களுக்கு திகட்டுமளவுக்கு அமைந்தது. இதில் அதிகமாக ரசிகர்களால் விமர்சிக்கப்படுவது இயக்குனர் சிவாதான். ஒரு மோசமான கதையை சொல்லி சூர்யாவின் 3 ஆண்டுகளை வீணடித்துவிட்டார் என்று சூர்யா ரசிகர்க கொந்தளிக்கின்றனர்.

சோஷியல் மீடியாவினர் இந்த படத்தை ஒட்டுமொத்தமாக முடித்துவிட்ட நிலையில் இப்போது சூர்யாவின் நண்பர்களும் திரையுலக பிரபலங்களுமான சிலர் படத்தைப் புகழ்ந்து பேசி வருகின்றனர். ஜோதிகா, இயக்குனர் சுசீந்திரன் வரிசையில் இப்போது நடிகர் மாதவன் கங்குவா படத்தைப் பாராட்டியுள்ளார். அதில் “என்ன ஒரு அசாதாரணமான முயற்சி” எனப் பாராட்டியுள்ளார்.