1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By VM
Last Updated : திங்கள், 29 அக்டோபர் 2018 (10:34 IST)

தந்தை வைரமுத்துக்கு ஆதரவாக பாடல் வெளியிட்ட மதன் கார்க்கி

கவிஞர் வைரமுத்து மீது சின்மயி பாலியல் புகார் எழுப்பி இருந்தார். இந்த விவகாரம் தமிழ் நாட்டில் பெரும் விவாதப் பொருளாக மாறியது.

இந்த பிரச்சினை குறித்து வைரமுத்துவின் மகனும் பாடலாசிரியருமான மதன் கார்க்கி இதுவரை கருத்து சொல்லாமல் இருந்து வந்தார். இந்நிலையில், ரஜினிகாந்தின் லிங்கா படத்தில் இடம்பெற்ற பாடல் ஆடியோவை தனது டுவிட்டரில் வெளியிட்டு அவருக்கு ஆதரவை வெளிப்படுத்தி இருக்கிறார்.
 
வைரமுத்துவே எழுதிய அந்த பாடல் வரிகள் வருமாறு:-
 
“உண்மை ஒருநாள் வெல்லும் இந்த உலகம் உன்பேர் சொல்லும். அன்று ஊரே போற்றும் மனிதன். நீயே நீயடா. பொய்கள் புயல்போல் வீசும். ஆனால் உண்மை மெதுவாய் பேசும். அன்று நீயே வாழ்வில் வெல்வாய். கலங்காதே. கரையாதே. ராமனும் அழுதான் தர்மனும் அழுதான். நீயோ அழவில்லை. உனக்கோ அழிவில்லை.
 
சிரித்து வரும் சிங்கம் உண்டு. புன்னகைக்கும் புலிகள் உண்டு. உரையாடி உயிர் குடிக்கும் ஓநாயும் உண்டு. பொன்னாடை போர்த்தி விட்டு உன்னாடை அவிழ்ப்பதுண்டு. பூச்செண்டில் ஒளிந்திருக்கும் பூநாகம் உண்டு. பள்ளத்தில் ஊர் யானை விழுந்தாலும் அதன் உள்ளத்தை வீழ்த்திட முடியாது. கெட்டாலும் நம் தலைவன் இப்போதும் ராஜன். கரையாதே கலங்காதே.” இவ்வாறு பாடலில் வரிகள் உள்ளன