கிறிஸ்துமஸ் படங்களில் வசூலில் முந்திய மாரி 2'

Last Modified திங்கள், 24 டிசம்பர் 2018 (07:17 IST)
தனுஷ், சாய்பல்லவி நடிப்பில் பாலாஜி மோகன் இயக்கிய 'மாரி 2' திரைப்படம் கடந்த 21ஆம் தேதி வெளியாகியது. இந்த படத்துடன் சீதக்காதி, அடங்கமறு, கனா, சிலுக்குவார்பட்டி சிங்கம் ஆகிய படங்கள் வெளிவந்த போதிலும் சென்னையை பொருத்தவரை 'மாரி 2' வசூல்தான் முதலிடம் பிடித்துள்ளது.

கடந்த வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய மூன்று நாட்களில் மாரி 2, திரைப்படம் ரூ.1.31 கோடி வசூலித்து சென்னை வசூலில் முதலிடத்தில் உள்ளது. ஆனால் இந்த படத்திற்கு கலவையான விமர்சனமே வந்துள்ளதால் இன்று முதல் சிறிய திரையரங்குகளுக்கு இந்த படம் மாற்றவிருப்பதாகவும் கூறப்படுகிறது.


'மாரி 2' படத்தின் ஓப்பனிங் நன்றாக இருந்தாலும் இந்த படம் வசூல் அளவில் ஒரு வெற்றிப்படமா? என்பதை இனிவரும் நாட்களில் வரும் வசூலை பொருத்தே கூற முடியும்


இதில் மேலும் படிக்கவும் :