வியாழன், 9 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: செவ்வாய், 5 அக்டோபர் 2021 (17:16 IST)

மாநாடு படத்துக்கு சிம்புவால் வந்த கூடுதல் செலவு!

நடிகர் சிம்பு நடித்துள்ள மாநாடு திரைப்படம் தீபாவளிக்கு வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடித்துள்ள படம் மாநாடு. முஸ்லீம் கதாப்பாத்திரத்தில் சிம்பு நடித்துள்ள இந்த படத்தில் கல்யாணி ப்ரியதர்ஷன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இந்நிலையில் இந்த படத்தின் ஃபர்ஸ் லுக், டீசர் போன்றவை முன்னதாக வெளியாகி வைரலாகியிருந்தது. இந்நிலையில் இந்த படத்தை எதிர்வரும் தீபாவளிக்கு ரிலீஸ் செய்ய திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. மேலும் இந்த படத்தின் டிரெய்லரும் வெளியாகி ரசிகர்களின் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த படத்தின் கொரோனாவுக்கு முன்பு கொரோனாவுக்கு பின்பு என இரு கட்டமாக படப்பிடிப்பை நடத்தி முடித்தது படக்குழு. இதில் என்ன சிக்கல் எழுந்தது என்றால் சிம்பு கொரோனாவுக்கு முன்பாக குண்டாக இருந்த நிலையில் கொரோனாவுக்குப் பின் உடல் எடையைக் குறைத்து ஒல்லியானார். இது படத்தில் மிகப்பெரிய வித்தியாசத்தை ஏற்படுத்தும் என்பதால் இப்போது சிம்புவை கம்ப்யூட்டர் கிராபிக்ஸ் மூலம் ஒல்லியாக்கும் வேலைகளை செய்துள்ளார்களாம். இதற்காக கணிசமான தொகை செலவிடப்பட்டுள்ளதாகவும் சொல்லப்படுகிறது.