1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: சனி, 24 ஜூன் 2023 (08:32 IST)

மாமன்னன் படத்துக்கு எதிரான வழக்கு… ரெட் ஜெயண்ட் மூவிஸ்க்கு உயர்நீதிமன்றம் உத்தரவு!

2018 ஆம் ஆண்டு உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் ராமசரவணன் தயாரிக்கும் ஏஞ்சல் என்ற திரைப்படம் அறிவிக்கப்பட்டது.  இந்த படத்தை இயக்குனர் கே எஸ் அதியமான் இயக்கினார். சில நாட்கள் ஷூட்டிங் முடிந்ததும் படம் கிடப்பில் போடப்பட்டது. படத்துக்கு உதயநிதி 8 நாட்கள் கால்ஷீட் கொடுத்தால் முடித்துவிடுவோம் என முன்பே ராம சரவணன் அறிக்கை வெளியிட்டிருந்தார்.

இந்நிலையில் இப்போது மாமன்னன் ரிலீஸ் ஆகும் நேரத்தில் ”ஏஞ்சல் படத்தை முடிக்க 25 நாட்கள் கால்ஷீட் தந்துவிட்டு மாமன்னன் திரைப்படத்தை ரிலீஸ் செய்யலாம். அல்லது எனக்கு 25 கோடி ரூபாய் நஷ்ட ஈடு கொடுக்க வேண்டும். இல்லைஎய்ன்றால் மாமன்னன் படத்தை ரிலீஸ் செய்ய தடை விதிக்க வேண்டும்” எனக் கூறி அவரது மனுவை தாக்கல் செய்திருந்தார்.

இந்த வழக்கு விசாரணை நேற்று வந்தபோது உதயநிதி ஸ்டாலின் தரப்பில் பதிலளிக்க அவகாசம் கேட்கப்பட்டது. இதைக் கேட்ட நீதிபதி ஜூன் 28 ஆம் தேதிக்குள் பதிலளிக்க உத்தரவிட்டுள்ளது. இதற்கிடையில் மாமன்னன் திரைப்படம் ஜூன் 29 ஆம் தேதி ரிலீஸ் ஆகவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.