திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: வியாழன், 19 ஜனவரி 2023 (16:01 IST)

வடிவேலுவின் தாயாருக்கு இறுதி மரியாதை செலுத்திய மு க அழகிரி!

வடிவேலுவின் தாயார் சரோஜினி அவர்கள் இன்று அதிகாலை வயது மூப்புக் காரணமாக இயற்கை எய்தினார்.

வைகைப்புயல் வடிவேலுவின் தாயார் சரோஜினி (எ) பாப்பா (87) மதுரை விரகனூரில் நேற்று இரவு உடல்நல குறைவால் காலமானார். வயது முதிர்வு காரணமாக உடல்நலக்குறைவாக இருந்து வந்த அவர் திடீரென நேற்று ( ஜனவரி 18 இரவு காலமானதையடுத்து அவருக்கு திரைத்துறை பிரபலங்கள் பலரும் அவருக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.  தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் அஞ்சலி குறிப்பு வெளியிட்டு இருந்தார்.

இந்நிலையில் இப்போது முன்னாள் முதல்வர் மு கருணாநிதியின் மகன்களில் ஒருவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான மு க அழகிரி மதுரையில் உள்ள வடிவேலுவின் வீட்டுக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்தியுள்ளார்.