வியாழன், 28 மார்ச் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Murugan
Last Modified: திங்கள், 3 ஜூலை 2017 (19:02 IST)

வரி விவகாரம் - மதன் கார்க்கி எடுத்த அதிரடி முடிவு

சினிமா துறையினர் மீது விதிக்கப்பட்டிருக்கும் ஜி.எஸ்டி மற்றும் கேளிக்கை வரிக்கு பல சினிமா பிரபலங்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.


 

 
மத்திய அரசு ஏற்கனவே 28 சதவீத ஜி.எஸ்.டி அமுலில் இருக்க, கேளிக்கை வரியை 30 சதவீதமாக அதிகரித்தது தமிழக அரசு. எனவே மொத்தம் 58 சதவீத வரியை அரசுக்கு கட்ட வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இது தமிழக திரைத்துறையினருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும், அதற்கு எதிர்பு தெரிவித்து தமிழகத்தில் திரையரங்குகள் இன்று முதல் மூடப்பட்டது.
 
இந்நிலையில் இதுபற்றி தனது டிவிட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ள பாடலாசிரியர் மதன் கார்க்கி “ சினிமா திரையரங்குகள் மூடிக்கிடப்பதை பார்க்கும் போது மனது வலிக்கிறது. விதிக்கப்பட்டுள்ள வரி சீரமைக்கப்பட்டு சினிமாத்துறை மீண்டும் சரியான பாதையில் பயணிக்கும் என நம்புகிறேன். வரி மறு சீரமைப்பு வரும் வரை பாடல்கள் மற்றும் வசனங்களுக்கு நான் பெறும் சம்பளத்தில் 15 சதவீதத்தை குறைத்துக் கொள்கிறேன். இது சினிமாத்துறைக்கு உதவும்” என அவர் குறிப்பிட்டுள்ளார்.
 
இந்த அறிவிப்பை கண்ட பலரும் அவரை பாராட்டி வருகின்றனர்.