1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By CM
Last Updated : வியாழன், 15 பிப்ரவரி 2018 (21:49 IST)

பா.இரஞ்சித்தின் படத்தை வெளியிடுகிறது லைகா நிறுவனம்

பா.இரஞ்சித் தயாரித்துள்ள ‘பரியேறும் பெருமாள்’ படத்தை, லைகா நிறுவனம் வெளியிடுகிறது.

 
‘அட்டகத்தி’, ‘மெட்ராஸ்’, ‘கபாலி’ ஆகிய படங்களை இயக்கியவர் பா.இரஞ்சித். தற்போது ‘காலா’ படத்தை இயக்கியுள்ளார். ரஜினிகாந்த், ஹுமா குரேஷி, நானா படேகர், சமுத்திரக்கனி, சுகன்யா, அஞ்சலி பட்டேல், சாக்‌ஷி அகர்வால், அருள்தாஸ் உள்ளிட்ட பலர் இந்தப் படத்தில் நடித்துள்ளனர். சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். ஏப்ரல் மாதம் 27ஆம் தேதி இந்தப் படம் ரிலீஸாக இருக்கிறது.
 
பா.இரஞ்சித்தின் நீலம் புரொடக்‌ஷன்ஸ் தயாரித்துள்ள படம் ‘பரியேறும் பெருமாள்’. மாரி செல்வராஜ் இயக்கியுள்ள இந்தப் படத்தில், கதிர், ஆனந்தி, யோகிபாபு ஆகியோர் நடித்துள்ளனர். சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். மார்ச் மாதம் இந்தப் படம் ரிலீஸாகிறது. இந்தப் படத்தை, லைகா நிறுவனம் வெளியிடுகிறது.