திங்கள், 2 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: செவ்வாய், 1 பிப்ரவரி 2022 (16:02 IST)

வீரமே வாகை சூடும் படத்துக்கு எதிராக லைகா நிறுவனம்!

விஷால் நடித்துள்ள வீரமே வாகை சூடும் திரைப்படம் இன்னும் 3 நாட்களில் ரிலீஸ் ஆக உள்ளது.

விஷால் ஜோடியாக டிம்பிள் நடித்துள்ள திரைப்படமான வீரமே வாகை சூடும் படத்தை அறிமுக இயக்குனர் து ப சரவணன் இயக்கையுள்ளார்.  இந்த திரைப்படத்தில் யோகிபாபு, மாரிமுத்து, துளசி, கவிதாபாரதி ஆகியோர் நடித்துள்ளனர். யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். ஜனவரி 26 ஆம் தேதி ரிலீஸ் ஆக இருந்த இந்த திரைப்படம் 10 நாட்கள் தள்ளி பிப்ரவரி 4 ஆம் தேதி ரிலிஸ் ஆகிறது.

இந்நிலையில் இந்த படத்துக்கு எதிராக லைகா நிறுவனம் வழக்கு தொடுக்க உள்ளதாக சொல்லப்படுகிறது. லைகா நிறுவனத்துக்கு ஒரு படம் நடித்துக் கொடுக்க விஷால் முன்பணம் வாங்கி சில் ஆண்டுகள் ஆகிவிட்ட நிலையில் இப்போது வரை நடித்துக் கொடுக்கவில்லை. அதனால் வீரமே வாகை சூடு படத்தின் ரிலிஸூக்கு எதிராக லைகா நிறுவனம் வழக்கு தொடுக்க உள்ளதாக சொல்லப்படுகிறது.