வியாழன், 26 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: திங்கள், 2 ஏப்ரல் 2018 (15:51 IST)

எல்.டி.டி.ஈ குறித்த திரைப்படம்: பிரபாகரன் வேடத்தில் யார்?

இலங்கையில் தனித்தமிழ் நாடு கேட்டு போராடிய எல்.டி.டி.ஈ என்ற தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கம் குறித்த திரைப்படம் ஒன்று தமிழில் உருவாகவுள்ளது. ஸ்டுடியோ 18 என்ற நிறுவனம் தயாரிக்கவுள்ளதாகவும் இந்த படத்தை வெங்கடேஷ்குமார் என்பவர் இயக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது..

இந்த படத்தில் விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாரகன் வேடத்தில் நடிக்க நடிகர் தேர்வு நடைபெற்று வருவதாகவும், விரைவில் இதுகுறித்த தகவல்கள் வெளிவரும் என்றும் இந்த படத்தின் படப்பிடிப்பு இம்மாதமே தொடங்கும் என்றும் தகவல்கள் வெளிவந்துள்ளது.

ஆனால அதே நேரத்தில் ஸ்டுடியோ 18 நிறுவனம் இலங்கையில் நடந்த இனப்படுகொலை குறித்து தயாரித்த திரைப்படமான 'நீலம்' என்ற திரைப்படம் பல்வேறு காரணங்களால் இன்று வரை வெளிவரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 'பிரபாகரன்' படத்திற்கும் அதே போல் தடைவருமா? என்ற சந்தேகம் அனேகர் மனதில் ஏற்படுகிறது.