வியாழன், 23 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. நட்சத்திர பேட்டி
Written By papiksha joseph
Last Updated : செவ்வாய், 15 நவம்பர் 2022 (14:53 IST)

Boy Bestie ரோல் வேணாவே வேணாம்னு சொன்னேன் - Love Today'வால் ஆதங்கப்பட்ட ஆஜீத்!

கோமாளி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் மிகப்பெரும் ஹிட் கொடுத்தவர் அறிமுக இயக்குனர் பிரதீப் ரங்கநாதன். அந்த படத்தின் வெற்றியை அடுத்து அவரே கதாநாயகனாகி இயக்கி அண்மையில் வெளியான லவ் டுடே திரைப்படம் வசூலில் சக்கை போடு போட்டுள்ளது. 
 
இந்த படம் மிகப்பெரும் வெற்றியை படைத்துள்ளது. இந்த காலத்து காதல் கலாட்டா குறித்து வெளியாகியுள்ள இத்திரைப்படம் இளைஞர்கள் மத்தியில் மிகப்பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. இதில் பாய் பெஸ்டி ரோலில் நடித்த ஆஜீத் யூடியூப் சேனல் ஒன்றிற்கு பேட்டி கொடுத்துள்ளார். 
 
அதில், இந்த படத்தில் முதலில் பாய் பெஸ்டி ரோல் என்றதும் நான் வேண்டாம் என கூறிவிட்டேன். பின்னர் எனது நண்பர்களிடமெல்லாம் விசாரித்த போதும் அவர்களும் இது வேண்டாம் என்று தான் சொன்னார்கள். பின்னர் படக்குழுவினர் அழைத்து நீங்க நடிச்சா சரியா இருக்கும்.  அவ்வளவு மோசமான காட்சிலாம் இருக்காது. இது காமெடியா தான் இருக்கும் என கூறி ஒப்புகொள்ளவைத்தார்கள் என்றார்.