வியாழன், 26 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Modified: புதன், 12 மே 2021 (21:20 IST)

இறைவா உனக்கு இரக்கமில்லையா? பிரபல நடிகர் உருக்கமான பதிவு!

சமீபத்தில் நடைபெற்ற சட்டசபைத் தேர்தலில் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம், சமக மற்றும் ஐஜேகேவுடன் கூட்டணி அமைத்துப் போட்டியிட்டது. ஆனால் இக்கூட்டணி ஒரு தொகுதியில் கூட வெற்றி பெறவில்லை.

இந்நிலையில் தற்போது பரவிவரும் கொரொனா வைரஸ் குறித்து  நடிகர் சமக கட்சி தலைவர் சரத்குமார் ஒரு உருக்கமான பதிவிட்டுள்ளார்.அதில், இயற்கைச் சீற்றத்தின் ஓர் அங்கமான மனித உயிர்களை மாய்க்கும் கொரோனாவை ஏன் தந்தாய்? நம்மைச் சுற்றி தினமும் மரண ஓலங்கள் அஞ்சி எழும் மனித வாழ்க்கை. உற்றார் உறவினர் சொந்த பந்தங்கள் மாய்ந்து வருகிறார்கள். அலைபேசி ஒலித்தால் அண்ணா பிராண வாயு கிடைக்குமா ? படுக்கை கிடைக்குமா ? மருத்துவமனையில் இடம் கிடைக்குமா என்பதைக் கேட்கும்போது நெஞ்சம் வெடித்துச் சிதறுகிறது எனத் தெரிவித்துள்ளார்.

மேலும், உடல் ஆரோக்கியமும் உயிருமே தற்போது பாதுகாக்க வேண்டியது என்பதை மனதில்கொண்டு இதுவும் கடந்துபோகும் என நம்பிக்கையுடன் தேவைப்பட்டால் அவசியம் இருந்தால் மட்டுமே வெளியில் செல்ல வேண்டும் என அனைவரையும் அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்..அரசு நிச்சயம் உங்கள் துன்பங்களை அறிவார்கள் ..நல்லது நடக்கும் இறைவா போதும் உன் சீற்றம் எங்களை வாழவிடு எனத் தெரிவித்துள்ளார்.