1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Updated : செவ்வாய், 10 அக்டோபர் 2023 (21:19 IST)

நடிகர் விஜயின் லியோ விளம்பரத்துடன் லண்டன் பஸ்

vijay leo
விஜய்யின் லியோ பட போஸ்டர்கள் லண்டன் பஸ்களில் ஒட்டப்பட்டு விளம்பரம் செய்யப்பட்டுள்ளது.
 
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் விஜய். இவர் நடிப்பில், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் லியோ. இந்த படத்தில் விஜய்யுடன் இணைந்து,  சஞ்சய் தத், அர்ஜுன், கௌதம் மேனன், மிஷ்கின் மற்றும் திரிஷா என ஏகப்பட்ட நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளனர்.
 
சமீபத்தில், விஜய்யின் லியோ திரைப்பட டிரைலர்  வெளியாகி இணையதளங்கில் டிரெண்டிங்கிங் ஆனது.  
 
இப்படம் வரும் அக்டோபர் 19 ஆம் தேதி ரிலீஸாகவுள்ளது.
 
ஏற்கனவே இப்படத்தின் முதல் சிங்கில் நா ரெடிதான், 2 வது சிங்கில் படாஸுதான் ஆகிய பாடல்கள் வெளியாகி ரசிகர்களின் வரவேற்பை பெற்ற நிலையில், இப்படத்தின் 3 வது சிங்கில்  அன்பெனும் என்ற பாடல் நாளை ரிலீஸாகும் என படக்குழு இன்று அறிவித்துள்ளது.
 
இந்த நிலையில், தமிழ்நாட்டைப் போலவே லண்டன் உள்ளிட்ட வெளி நாடுகளிலும் விஜய்யின் லியோ பட டிக்கெட்டுகள் அதிகளவு முன்பதிவு செய்யப்பட்டு வருகிறது.
 
இப்படத்தை விளம்பரப்படுத்த வேண்டி, தயாரிப்பு நிறுவனம் மற்றும் இப்படத்தை விநியோகிக்கும் நிறுவனமும் பல்வேறு விளம்பர யுக்திகளை கையில் எடுத்துள்ளனர்.
 
அதன்படி, இங்கிலாந்து நாட்டின் லண்டன் நகர் பேருந்துகளில் விஜயின் லியோ பட விளம்பர போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளனர். இந்தப் புகைப்படம் வைரலாகி வருகிறது.