திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: சனி, 25 பிப்ரவரி 2023 (18:59 IST)

நான்கே மாதத்தில் முடியும் விஜய்யின் லியோ பட ஷுட்டிங்… ஹேப்பி மூடில் தயாரிப்பாளர்!

விஜய் அடுத்து நடிக்கும் லியோ படத்தின் ப்ரமோஷன் வீடியோ மற்றும் டைட்டில் போஸ்டர் வெளியாகி வைரல் ஆனது இந்த படத்தின் டைட்டில் வீடியோ வைரல் ஆனது. இந்த படத்தில் சஞ்சய் தத், அர்ஜுன், மிஷ்கின், மன்சூர் அலிகான் ஆகியோர் வில்லன்களாக நடிக்க உள்ளனர். படத்தின் முக்கியக் காட்சிகளைப் படமாக்க படக்குழு மொத்தமும், காஷ்மீருக்கு சில நாட்களுக்கு முன்னர் பயணம் செய்தது. இந்நிலையில் இப்போது திட்டமிட்ட காட்சிகளை எடுத்து முடிப்பதற்கு முன்பாகவே பேக்கப் செய்துவிட்டு சென்னைக்கு வர உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

காஷ்மீரில் கடும்பனி காரணமாக திட்டமிட்டபடி படப்பிடிப்பு செய்ய முடியவில்லை என்பதால் இந்த முடிவைப் படக்குழு எடுத்துள்ளதாக சொல்லப்படுகிறது. ஆனால் தொடர்ந்து முக்கியமானக் காட்சிகளை அங்கேயே படக்குழு படமாக்கி வருகிறது.

மார்ச் இறுதிவரை அங்கு நடக்கும் ஷூட்டிங்கை முடித்துவிட்டு சென்னை வரும் படக்குழு, அடுத்து சில நாட்கள் இடைவெளியில் ஷூட்டிங்கை தொடங்கி, மே மாதத்துக்குள்ளாக மொத்தக் காட்சிகளையும் ஷூட் செய்து முடிக்க உள்ளதாம். ஜனவரி மாதம் தொடங்கிய லியோ ஷூட்டிங் மே மாதத்துக்குள், மொத்தம் நான்கே மாதங்களில் நிறைவடைய உள்ளது குறிப்பிடத்தக்கது. இதனால் லியோ படத்தின் தயாரிப்பாளர் லலித் உச்சபட்ச மகிழ்ச்சியில் உள்ளதாக சொல்லப்படுகிறது.