செவ்வாய், 21 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: செவ்வாய், 21 நவம்பர் 2023 (14:09 IST)

லியோல நடந்த தப்பு தலைவர் படத்துல நடக்கக் கூடாது… லோகேஷ் எடுத்த அதிரடி முடிவு!

கடந்த அக்டோபர் 19 ஆம் தேதி ரிலீஸ் ஆன லியோ திரைப்படம் இதுவரை 541 கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்துள்ளது. இந்த திரைப்படத்தின் வெற்றி விழா நேற்று முன் தினம் சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் நடைபெற்றது. அதில் நடிகர் விஜய் உள்ளிட்ட படத்தில் பணியாற்றிய பல நடிகர் நடிகைகள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் பங்கேற்று பேசினார்கள்.

படம் மிகப்பெரிய அளவில் வசூலித்தாலும், விமர்சன ரீதியாக கலவையான விமர்சனங்களையே பெற்றது. குறிப்பாக படத்தின் இரண்டாம் பாகம் மிகவும் தட்டையாக உருவாக்கப்பட்டு இருந்ததாகவும் விமர்சனங்கள் எழுந்தன. இரண்டாம் பாதியில் இடம்பெற்ற பிளாஷ்பேக் காட்சி ரசிகர்களை இருக்கையில் நெளிய வைத்தது.

இந்நிலையில் இப்போது ரஜினிகாந்த் படத்துக்கான திரைக்கதை எழுதும் வேலையில் இறங்கியுள்ள லோகேஷ், லியோ படத்தில் நடந்த தவறு இந்த படத்தில் நடக்க கூடாது எனக் கவனமாக இருக்கிறாராம். அதற்காக சில முன்னணி இயக்குனர்களோடு திரைக்கதை குறித்து விவாதிக்க முடிவு செய்துள்ளதாக சொல்லப்படுகிறது.