1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Mahendran
Last Modified: வியாழன், 10 மார்ச் 2022 (18:01 IST)

ஓட்டல் முதலாளிக்கு நன்றி கூறிய லோகேஷ் கனகராஜ்: எதற்கு தெரியுமா?

சென்னையில் உள்ள பிரபல ஹோட்டல் முதலாளிக்கு நன்றி கூறி இயக்குனர் லோகேஷ் கனகராஜ் பதிவு செய்துள்ள செல்பி புகைப்படம் வைரலாகி வருகிறது. 
 
கடந்த 2010ஆம் ஆண்டுகளில் சினிமாவில் வாய்ப்பு தேடிய போது தனக்கு சோறு போட்டது அந்த ஹோட்டல் முதலில் தான் என்றும் அவருக்கு எனது நன்றியை தெரிவித்துக் கொள்வதாகவும் ஓட்டல் முதலாளி ஸ்ரீனி என்பவருடன் செல்பி புகைப்படம் எடுத்து அந்த புகைப்படத்தை தனது சமூக வலைத்தளத்தில் லோகேஷ் கனகராஜ் பதிவு செய்துள்ளார்
 
தற்போது லோகேஷ் கனகராஜ் விஜய் கமல் உள்பட பல பெரிய நடிகர்களின் படங்களை இயக்கி தமிழ் திரையுலகின் முன்னணி இயக்குனராக உள்ளார் என்றாலும் அவர் பழையதை மறக்காமல் உள்ளார் என்பது இந்த போஸ்ட் மூலம் தெரியவருகிறது