ஞாயிறு, 14 ஏப்ரல் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Updated : திங்கள், 27 நவம்பர் 2023 (17:55 IST)

புதிய அவதாரம் எடுத்த லோகேஷ் கனகராஜ்!

தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர் லோகேஷ் கனகராஜ். இவர், இயக்கத்தில் கடந்த 2017 ஆம் ஆண்டு வெளியான முதல் படம் மாநகரம். இப்படத்தை அடுத்து, கார்த்தி நடிப்பில்  கைதி என்ற படத்தை இயக்கினார்.
 
இதையடுத்து, விஜய், விஜய் சேதுபதி நடிப்பில் மாஸ்ட படத்தை இயக்கினார். இப்படத்தை அவரது குருவான கமல் நடிப்பில் விக்ரம் படத்தை இயக்கினார். இது இண்ஸ்டரி ஹிட் ஆனது.
 
மீண்டும் விஜயுடன் இணைந்து லியோ படத்தை இயக்கினார். சமீபத்தில் வெளியான இப்படம் நல்ல வரவேற்பை பெற்று வசூல் குவித்துள்ளது.
 
அடுத்து, சூப்பர் ஸ்டார் ரஜினி நடிப்பில் 171  படத்தை இயக்கவுள்ளார். இந்த நிலையில், லோகேஷ் கனகராஜ்  இன்று ஒரு புதிய அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

அதில், ''ஜி ஸ்குவாட்( G Squad)  என்ற பெயரில் படத்தயாரிப்பு நிறுவனம் தொடங்கியுள்ளதாகவும், இதன் மூலம் புதியவர்களுக்கும், இளம் இயக்குனர்களுக்கு வாய்ப்பு கொடுக்கவுள்ளதாக கூறியுள்ளார். மேலும், இந்த  நிறுவனம் சார்பில் முதலில் சில படங்கள் தன்  நண்பர்கள்,  உதவியாளர்களின் படைப்புகள் வெளியாகும் எனவும், முதல் படம் பற்றிய அறிவிப்பு வெளியாகும் வரை ரசிகர்கள் காத்திருக்கும்படி''  தெரிவித்துள்ளார்.