திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: வெள்ளி, 15 டிசம்பர் 2023 (09:02 IST)

லியோ படத்துல செஞ்ச தப்ப இனிமேல் நான் பண்ண மாட்டேன்… லோகேஷ் தகவல்!

கடந்த அக்டோபர் 19 ஆம் தேதி ரிலீஸ் ஆன லியோ திரைப்படம் இதுவரை 600 கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்துள்ளது. படம் மிகப்பெரிய அளவில் வசூலித்தாலும், விமர்சன ரீதியாக கலவையான விமர்சனங்களையே பெற்றது. குறிப்பாக படத்தின் இரண்டாம் பாகம் மிகவும் தட்டையாக உருவாக்கப்பட்டு இருந்ததாகவும் விமர்சனங்கள் எழுந்தன.

இரண்டாம் பாதியில் இடம்பெற்ற பிளாஷ்பேக் காட்சி ரசிகர்களை இருக்கையில் நெளிய வைத்தது. ரசிகர்கள் அதுபற்றி விமர்சனம் செய்த போது அது பேக் பிளாஷ்பேக் என லோகேஷ் சொல்லப் போக, அதற்கும் கடுமையான எதிர் விமரசனங்கள் வந்தன.

இந்நிலையில் இப்போது அது பற்றி பேசியுள்ள லோகேஷ் “பலரும் லியோ படத்தின் இரண்டாம் பாதியில் பிரச்சனைகள் இருப்பதை சொல்வதை நானும் கவனிக்கிறேன். படத்தின் ரிலீஸ் தேதியை அறிவித்துவிட்டு ஷூட்டிங் சென்றதால் இதுபோல பிரச்சனைகள் வருகின்றன. எனக்கு போதுமான நேரம் கிடைக்கவில்லை என நினைக்கிறேன். இனிமேல் நான் என்னுடைய படங்களுக்கு ரிலீஸ் தேதி அறிவிக்காமல்தான் ஷூட்டிங் செல்லப் போகிறேன்” எனக் கூறியுள்ளார்.