1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: வெள்ளி, 15 டிசம்பர் 2023 (08:45 IST)

மிஷ்கினின் ட்ரெயின் படத்தில் இணைந்த பிரபல நடிகை!

பிசாசு 2 படத்தில் இணைந்து பணியாற்றிய மிஷ்கின் மற்றும் விஜய் சேதுபதி இப்போது ஒரு முழுநீளப் படத்தில் இணைந்து பணியாற்ற உள்ளனர். இந்த படத்தை கலைப்புலி எஸ் தாணு தயாரிக்கிறார். இந்த படத்தின் ஷூட்டிங் சில நாட்களுக்கு முன்னர் சென்னையில் தொடங்கியது.

ட்ரெயின் செட் ஒன்று அமைக்கப்பட்டு அதில் காட்சிகளை படமாக்கி வருகின்றனர். இந்த படத்துக்கு இயக்குனர் மிஷ்கினே இசையமைக்கிறார். பௌசியா ஒளிப்பதிவாளராக பணியாற்ற உள்ளார்.

இந்நிலையில் இந்த படத்தில் ஒரு முக்கிய வேடத்தில் நடிகை கனிகா நடிக்க உள்ளார். இது சம்மந்தமாக மிஷ்கினுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ள அவர் “நான் எப்போதுமே அவர் படங்களை வியந்து பார்த்துள்ளேன்.  அவரின் திரைக்கதைகள் தனித்துவம் ஆனவை.  அவரின் படத்தில் இணைவது ஸ்பெஷலானது. ” எனக் கூறியுள்ளார்.