1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By siva
Last Modified: திங்கள், 24 ஆகஸ்ட் 2020 (12:19 IST)

’மாஸ்டர்’ திரைப்படத்தில் லோகேஷ் கனகராஜ் நடித்துள்ளாரா? வைரலாகும் புகைப்படம்

’மாஸ்டர்’ திரைப்படத்தில் லோகேஷ் கனகராஜ் நடித்துள்ளாரா?
தளபதி விஜய் நடிப்பில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கிய ’மாஸ்டர்’ திரைப்படம் ரிலீஸுக்கு தயாராக உள்ளது என்பதும் இந்த திரைப்படம் திரையரங்குகள் திறந்தவுடன் பிரமாண்டமாக வெளியாகும் என்பதும் தெரிந்ததே
 
கடந்த ஏப்ரல் மாதமே இந்த திரைப்படம் திரையிட திட்டமிடப்பட்டு இருந்தது. ஆனால் கொரோனா வைரஸ் காரணமாக இந்த படத்தின் ரிலீஸ் தேதி தள்ளி வைக்கப்பட்டுள்ளது. இருப்பினும் இந்த ஆண்டின் மிகப்பெரிய எதிர்பார்ப்புக்குரிய திரைப்படமான ’மாஸ்டர்’ திரைப்படத்தை விஜய் ரசிகர்கள் மிகுந்த ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர் 
 
இந்த நிலையில் ’மாஸ்டர்’ திரைப்படம் குறித்த தகவல்கள் அவ்வப்போது சமூக வலைதளங்களில் வெளியாகி டிரெண்டை ஏற்படுத்தும் என்பது தெரிந்ததே. அந்த வகையில் சற்று முன்னர் வெளியான ஒரு புகைப்படமும் மிகப்பெரிய அளவில் சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது 
 
இந்த புகைப்படத்தில் ஜெயில் கைதி உடையில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் மற்றும் இயக்குனர் ரத்னகுமார் ஆகியோர் உள்ளனர். இதனை வைத்து இந்த படத்தில் சிறப்பு தோற்றத்தில் இருவரும் நடித்துள்ளார்களா? என்ற கேள்வி எழுந்துள்ளது. இந்த புகைப்படத்தை தற்போது விஜய் ரசிகர்கள் வைரலாகி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது