1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Suresh
Last Modified: வியாழன், 15 ஜனவரி 2015 (10:48 IST)

வெளிநாடுகளில் இன்று இணையத்தில் வெளியாகும் லிங்கா

லிங்கா படத்தை இந்தியா தவிர்த்த வெளிநாடுகளில் இன்று இணையத்தில் வெளியிடுகின்றனர்.





 
இணையத்தில் லிங்காவை வெளியிடுவதற்கான உரிமையை ஹீரோ டாக்கீஸ். காம் என்ற நிறுவனம் பெற்றுள்ளது.
 
இணையத்தில் பணம் செலுத்தி விரும்பிய படத்தை பார்க்கிற வசதி வெளிநாடுகளில் வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டு வருகிறது.
 
இந்தியாவில் திரையரங்குகளின் வசூல் பாதிக்கப்படும் என்று இந்த வழக்கம் இங்கு அவ்வளவாக பிரபலமாக்கப்படாமல் உள்ளது.
 
இந்நிலையில், இன்று முதல் வெளிநாடுகளில் லிங்கா இணையத்தில் வெளியாகிறது. விரும்பியவர்கள் பணம் செலுத்தி வீட்டில் இருந்தபடியே படத்தைப் பார்த்து ரசிக்கலாம்.லிங்கா படத்தை இந்தியா தவிர்த்த வெளிநாடுகளில் இன்று இணையத்தில் வெளியிடுகின்றனர்.