வெள்ளி, 20 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: வெள்ளி, 31 டிசம்பர் 2021 (11:42 IST)

வெளியானது மிரட்டலான லைகர் படத்தின் கிள்ம்ப்ஸ் வீடியோ!

விஜய் தேவாரகொண்டா நடிப்பில் உருவாகும் திரைப்படம் லைகர். இதில் அமெரிக்க முன்னாள் குத்துச்சண்டை வீரர் மைக் டைசன் நடிக்கிறார்.

தென்னிந்தியாவில் வளரும் நட்சத்திரமாக உயர்ந்து வருகிறார் விஜய் தேவாரகொண்டா. இப்போது அவர் நடிக்கும் படத்தை பூரி ஜகன்னாத் இயக்கி வருகிறார். இந்த திரைப்படம் தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி ஆகிய மொழிகளிலும் ரிலீஸாக உள்ளது. இந்த படத்தின் போஸ்டரை இன்று இணையத்தில் வெளியிட்டுள்ளார் விஜய் தேவாரகொண்டா. இந்த படத்துக்கு லைகர் (லைன் +டைகர்) என்ற பெயர் வைத்துள்ளனர். இந்த படத்தை இந்தியின் முன்னணி இயக்குனர் கரண் ஜோஹரின் தர்மா புரொடக்‌ஷன் நிறுவனம் தயாரிக்கிறது.

இந்த படத்தில் விஜய் பாக்ஸராக நடிக்கும் நிலையில் படத்தில் ஒரு முக்கிய வேடத்தில் பிரபல குத்துச் சண்டை வீரரான மைக் டைசன் நடிக்கிறார். அமெரிக்காவில் முக்கியமான காட்சிகளை படக்குழு படமாக்கியுள்ளது. இந்நிலையில் இந்த படத்தின் ரிலீஸ் தேதி இப்போது அறிவிக்கப்பட்டுள்ளது. அடுத்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் 25 ஆம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகும் என படக்குழு அறிவித்திருந்தனர்.

இந்நிலையில் இப்போது இந்த படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோ இணையத்தில் வெளியாகியுள்ளது. அமெரிக்காவில் நடக்கும் குத்துச்சண்டை போட்டியில் கலந்துகொள்ளும் இந்தியராக இதில் விஜய் தேவாரகொண்டா நடித்துள்ளார். இந்த வீடியோ இப்போது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.