1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: வியாழன், 25 ஜனவரி 2024 (07:52 IST)

எல் ஐ சி நிறுவனத்துக்கு பதில் கடிதம் அனுப்பிய விக்னேஷ் சிவன்!

பிரதீப் ரங்கநாதன் இயக்கி நடித்த லவ் டுடே திரைப்படம் கடந்த ஆண்டு வெளியானது. 5 கோடி பட்ஜெட்டில் உருவான இந்த திரைப்படம் திரையரங்கு மூலமாகவே 100 கோடி ரூபாய்க்கும் மேல் வசூல் செய்ததாக தகவல்கள் வெளியாகின.

இதையடுத்து விக்னேஷ் சிவன் இயக்கத்தில் ஒரு படம் நடித்து வருகிறார். லியோ படத்தின் தயாரிப்பாளர் லலித்குமார் தயாரிக்கிறார். படத்தில் ப்ரதீப்புக்கு சகோதரி வேடத்தில் நயன்தாரா நடிக்க உள்ளதாக சொல்லப்பட்டது. ஆனால் இப்போது அவர் படத்தில் இருந்து விலகியுள்ளதாக சொல்லப்படுகிறது.இந்நிலையில் இப்போது இந்த படத்தின் ஷூட்டிங் கோவை ஈஷா மையத்தில் சில தினங்களுக்கு முன்னர் தொடங்கியுள்ளது. இந்த ஷூட்டிங்கை ஜக்கி வாசுதேவ் முன்னிலையில் தொடங்கியுள்ளார் விக்னேஷ் சிவன்.

இந்த படத்துக்கு LIC (Love insurance corporation) என தலைப்பு வைத்திருந்தார் இயக்குனர் விக்னேஷ் சிவன். ஆனால் தங்கள் நிறுவனப் பெயரை வைக்கக் கூடாது என எல் ஐ சி நிறுவனம் விக்னேஷ் சிவனுக்கு நோட்டீஸ் அனுப்பியிருந்தது. இந்நிலையில் தன்னுடைய தலைப்புக்கு விளக்கமளித்து விக்னேஷ் சிவன் எல் ஐ சி நிறுவனத்துக்கு விளக்கக் கடிதம் அனுப்பியுள்ளதாக சொல்லப்படுகிறது.