வியாழன், 23 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Siva
Last Modified: வெள்ளி, 27 அக்டோபர் 2023 (20:30 IST)

லியோ, ஜெயிலர் வசூலை முந்தாது.. லலித் பொய் சொல்கிறார். தியேட்டர் ஓனர் பேட்டி..!

விஜய் நடித்த லியோ திரைப்படம் சமீபத்தில் வெளியாகி கிட்டத்தட்ட 500 கோடி ரூபாய் வசூல் ஆனதாக கூறப்பட்ட நிலையில் படத்தின் தயாரிப்பாளர் வசூல் குறித்த தகவலை பொய்யாக சொல்கிறார் என்றும் இந்த படம் ஜெயிலர் வசூலை முந்தாது என்றும் திருச்சி திரையரங்க உரிமையாளர்களில் ஒருவரான ஸ்ரீதர் தெரிவித்துள்ளார். 
 
லியோ படத்தை ஆரம்பம் முதலே ரொம்ப ஓவர் பில்டப் செய்தார்கள் என்றும்  லியோ திரைப்படம் மிகவும் சுமாரான படம் தான் என்றும் முதல் நாளில் நல்ல வசூல் கிடைத்தது ஆனால் இரண்டாவது நாளே வசூல் மிகவும் குறைந்துவிட்டது என்றும்  புதன் வியாழன் ஆகிய இரண்டு நாட்களில் படு மோசமான வசூல் செய்தது என்றும் இந்த படம் எதிர்பார்த்த வசூலை பெறவில்லை என்றும் தெரிவித்தார். 
 
இதற்கு  முழுமையான காரணம் லோகேஷ் கனகராஜ் என்றும் இரண்டாம் பாதி படம் மோசமாக இருந்தது என்றும் தெரிவித்தார். மேலும் இந்த படத்தின் தயாரிப்பாளர் லலித் கிடையாது என்றும் எனக்கு கிடைத்த தகவலின் படி இந்த படத்தின் உண்மையான தயாரிப்பாளர் விஜய் தான் என்றும் அவர் மேலும் கூறினார்.
 
 
Edited by Siva