வியாழன், 9 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Updated : திங்கள், 10 ஏப்ரல் 2023 (16:34 IST)

பழம்பெரும் நடிகை ஜலபாலா வைத்யா காலமானார்

jalabala vaidya
பழம்பெரும் நடிகையும்,  டெல்லி அக்ஷ்ரா தியேட்டரின் இணை நிறுவனருமான ஜலபாலா வைத்யா இன்று மரணமடைந்தார்.

ஆரம்ப காலத்தில் பத்திரிக்கையாளராக தன் வாழ்க்கையைத் தொடங்கியவர் ஜலபால வைத்யா. இவர், 20 நாடகங்களில் முக்கிய வேடங்களில் நடித்துள்ளார்.

Full circle, The Ramayana, Lets Laugh Again, Larflarflarf,  The Bhagavad Gita, The Cabuliwala, Gitanjali, The Strange Case of Bily Biswas  ஆகிய பிரபலமானவை ஆகும்.

இந்த நிலையில் டெல்லியில் வசித்து வந்த ஜலபாலா வைத்யா(86) சில நாட்களாக உடல் நலம் சரியில்லாமல், சுவாசக் கோளாறால் அவதிப்பட்டு,  சிகிச்சை பெறு வந்த நிலையில் இன்று காலமானார் என்று  அவரது மகளும், நடன இயக்குனருமான அனசுடா வைத்யா ஷெட்டி தெரிவித்துள்ளார்.


பழம்பெரும் நடிகையும்,  டெல்லி அக்ஷ்ரா தியேட்டரின் இணை நிறுவனருமான ஜலபாலாவின் மறைவுக்கு சினிமா துறையினர் மற்றும் ரசிகர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.