திங்கள், 27 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By VM
Last Modified: ஞாயிறு, 21 அக்டோபர் 2018 (12:00 IST)

‘மீ டூ’ இயக்கம் அந்த பயத்தை உடைத்தெறிந்துவிட்டது: லீனா மணிமேகலை

தென்னிந்திய திரைத்துறை பெண்கள் மையத்தின் நிர்வாகிகள் சென்னை சேப்பாக்கத்தில் நேற்று செய்தியாளர்களை சந்தித்தனர். 
 
இந்த சந்திப்பில் கவிஞர் லீனா மணிமேகலை செய்தியாளர்களிடம் பேசியதாவது: 
 
பெண்களுக்கு எதிரான பிரச்சினைகளுக்காக  நடிகை வரலட்சுமி சரத்குமார் ஒரு இயக்கத்தை தொடங்கினார். ஆனால்  திரைத்துரையினர், எதிர்காலம் குறித்த பயம் காரணமாக சொல்லாமல் இருந்தனர். ஆனால் ‘மீ டூ’ இயக்கம் அந்த பயத்தை உடைத்தெறிந்து விட்டது. திரைத்துறையினரும், மக்களும் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு ஆதரவு கொடுத்து வருகிறார்கள். இந்த இயக்கம் குற்றவாளிகளை வெளிச்சத்துக்கு கொண்டு வரும்.
 
இயக்குனர் சுசிகணேசனால் எனக்கு ஏற்பட்ட பிரச்சினைகளை மறுபடியும் பேசி மனம் புண்பட விரும்பவில்லை. எனது பிரச்சினைகளை தெளிவாக ‘பேஸ்-புக்’ பக்கத்தில் வெளியிட்டுள்ளேன். ‘மீ டூ’ இயக்கத்துக்கு பெரிய சினிமா பிரபலங்கள் ஏன் ஆதரவு அளிக்கவில்லை என்பதை அவர்களிடம் தான் கேட்கவேண்டும். ஆனாலும் இயக்குனர்கள் ஜனநாதன், வெற்றிமாறன், நடிகர் சித்தார்த் ஆகியோர் எங்களுக்கு ஆதரவு அளித்துள்ளனர்" என்றார்.