வெற்றிமாறன் படத்தில் இணைந்த முன்னணி இயக்குநர் !
சூரி ஹீரோவாக நடிக்கும் படத்தில் கெளதம் மேனன் முக்கிய கேரக்டரில் நடிக்கவுள்ளார்.
தனுஷுடனான அசுரன் படத்தின் வெற்றியை தொடர்ந்து இயக்குனர் வெற்றிமாறன் இயக்கி வரும் திரைப்படம் “விடுதலை”. இந்த படத்தின் மூலமாக காமெடி நடிகர் சூரி முதன்முறையாக கதாநாயகனாக நடிக்கிறார். இந்த படத்தில் முக்கியமான கதாப்பாத்திரத்தில் விஜய் சேதுபதி நடிக்கிறார்.
இந்த படத்தின் முதல் லுக் சமீபத்தில் வெளியிடப்பட்டது. அதையடுத்து படத்தின் நாயகனாக நடிக்கும் சூரி என் வாழ்வில் இந்த முக்கிய தருணத்தை ஏற்படுத்திக்கொடுத்த இயக்குநர் வெற்றிமாறன் அண்ணனுக்கும், இசைஞானி ஐயா அவர்களுக்கும், எல்ரெட் குமார் சாருக்கும் மனமார்ந்த நன்றிகள். புதிய பரிமாணத்தில் மாமா விஜய் சேதுபதியுடன் இணைவதில் மகிழ்ச்சி என டிவீட் செய்தார்.
இந்நிலையில் இப்படத்தில் முக்கிய பிரபலமான இயக்குநர் கௌதம் மேனன் இணைந்துள்ளார்.
எழுத்தாளர் ஜெயமோகனின் துணைவன் என்ற சிறுகதையை எடுத்து விடுதலை என்ற பெயரில் சினிமாவாக வெற்றி மாறன் இயக்கவுள்ளார். இந்நிலையில் இப்படத்திற்கு நாளுக்கு நாள் எதிர்பார்ப்பு அதிகரித்துவரும் நிலையில், இப்படத்தில் தற்போது கௌதம் வாசுதேவ் மேனன் இணைந்துள்ளது படத்திற்கு பலமாகப் பார்க்கப்படுகிறது.
ஏற்கனவே கெளதம் மேனன் கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் என்ற படத்தில் காவல்துறை அதிகாரியாக நடித்தது குறிப்பிடத்தக்கது.