விக்ரம் படத்தில் இருந்து விலகினாரா லாரன்ஸ்?
கமல் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்க இருந்த விக்ரம் படத்தில் இருந்து நடிகர் லாரன்ஸ் விலகியுள்ளதாக சொல்லப்படுகிறது.
இயக்குனர் லோகேஷ் கனகராஜ் மிகப்பெரிய கமல் ரசிகர். அவரின் கைதி படத்தை விருமாண்டியின் தொடர்ச்சி என்றும் மாஸ்டர் படத்தில் நம்மவர் படத்தை நினைவுபடுத்தும் காட்சிகளும் உள்ளன. இந்நிலையில் லோகேஷ் கமலை வைத்து விக்ரம் என்ற படத்தை இயக்க உள்ளார்.
இதற்கான போட்டோஷூட் எல்லாம் நடந்து முடிந்த நிலையில் கமல் தேர்தலுக்கு முன்னர் இந்த படத்தில் நடித்து முடிப்பதாக இருந்தார். ஆனால் இப்போது படத்தை தொடங்குவதில் சிறிது தாமதம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் படத்தில் வில்லனாக நடிக்கப் போவது யார் என்பது குறித்து பலவாறாக செய்திகள் வெளியாகின. பஹத் பாசில், நவாசுதீன் சித்திக் மற்றும் பிரபுதேவா ஆகியவர்களின் பெயர்கள் எல்லாம் பரிசீலிக்கப்பட்டது. ஆனால் இப்போது வில்லனாக நடிக்க தமிழின் முன்னணி கதாநாயகர்களில் ஒருவரான ராகவா லாரன்ஸிடம் பேச்சுவார்த்தை நடத்துவதாக சொல்லப்படுகிறது.
ஆனால் இப்போது லாரன்ஸ் அந்த படத்தில் இருந்து விலகிவிட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளன. மேலும் அவருக்கு பதிலாக விஜய் சேதுபதி அந்த படத்தில் நடிக்க வாய்ப்புகள் இருப்பதாக தெரிகிறது. ஏனெனில் ராஜ்கமல் நிறுவனம் தயாரிக்கும் ஒரு படத்துக்கு ஏற்கனவே விஜய் சேதுபதிக்கு அட்வான்ஸ் கொடுக்கப்பட்டுள்ளது.