செவ்வாய், 7 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Modified: புதன், 1 பிப்ரவரி 2023 (15:03 IST)

பம்பாய் சகோதரிகளில் ஒருவரான லலிதா இன்று காலமானார்

lalitha chandiran
பம்பாய் சகோதரிகளில் ஒருவரான லலிதா  இன்று காலமானார். அவரது மறைவுக்கு பாடகர்கள் மற்றும், ரசிகர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

கர்நாடக இசைக் கச்சேரிகளில் தனிமுத்திரை பதித்தவர்கள் பாம்பாய் சகோதரரிகள். கடந்த 1963 ஆம் ஆண்டு முதல்  இருவரும் மேடைக் கச்சேரிகளில் பாடி வருகின்றனர்.

தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, மலையாளம், சமஸ்கிருதம், இந்தி, மராத்தி உள்ளிட்ட மொழிகளிலும் பாடல்கள் பாடியுள்ளனர்.

இவர்கள் பாடிய ஜகிரி  நந்தினி பக்திப் பாடல் பிரபலமானது.   பம்பாய் சகோதரிகளில் இளையரவான லலிதா இன்று காலமானார். அவருக்கு வயது 85 ஆகும்.

கேரள மாநிலத்தைச் சேர்ந்த இவர், மும்பையில் படிப்பை முடித்து, சென்னையில் குடும்பத்துடன் வசித்து வந்தார். இவர் தன் சகோதரி சரோஜாவுடன் இணைந்து பல பக்திப் பாடல்கள் பாடியுள்ளது குறிப்பிடத்தக்கது.

பாடகி லலிதாவின் மறைவுக்கு கலையுலகினரும், ரசிகர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.