1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: புதன், 17 மே 2023 (07:46 IST)

லால் சலாம் ஷூட்டிங்கில் இருந்து பாதியிலேயே கிளம்பிய ரஜினிகாந்த்… காரணம் என்ன?

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் உருவாக இருக்கும் லால் சலாம் என்ற படத்தின் படப்பிடிப்பு இன்று சென்னையில் தொடங்கியதாக லைகா நிறுவனம் அறிவித்துள்ளது. ஆஸ்கார் நாயகன் ஏஆர் ரஹ்மான் இசையில் உருவாகி வருகிறது. சென்னையில் முதல்கட்ட படப்பிடிப்பு நடந்த நிலையில் பின்னர் திருவண்ணாமலையில் அடுத்த கட்ட ஷூட்டிங் நடந்தது.

இதையடுத்து  படத்தில் ரஜினி சம்மந்தப்பட்டக் காட்சிகளை மும்பையில் படமாக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதற்காக ரஜினிகாந்த் மும்பைக்கு சென்றுள்ளார். இந்நிலையில் தற்போது லால் சலாம் படத்தில் ரஜினிகாந்தின் கதாபாத்திர பெயர் மொய்தீன் பாய் என்று அறிவிக்கப்பட்டு அவரின் தோற்ற ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது. இந்த படத்தில் பாட்ஷா படத்துக்குப் பிறகு ரஜினிகாந்த் இஸ்லாமிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் 8 நாட்கள் ஷூட்டிங்குக்காக ரஜினி சென்ற நிலையில் மூன்று நாட்கள் மட்டுமே ஷூட்டிங்கில் கலந்துகொண்டதாக சொல்லப்படுகிறது. ஏனென்றால் ரஜினியோடு நடிக்க வேண்டிய ஒரு முக்கிய நடிகர் ஷூட்டிங்குக்கு வரவில்லை என்பதால் ஷூட்டிங் நடக்கவில்லை என்றும் அதனால் ரஜினி சென்னைக்கு திரும்பியதாகவும் சொல்லப்படுகிறது. மேலும் அவர் சம்மந்தமான காட்சிகளை சென்னையிலேயே செட் அமைத்து எடுக்க உள்ளதாக சொல்லப்படுகிறது.