1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Papiksha Joseph
Last Updated : வெள்ளி, 20 ஆகஸ்ட் 2021 (10:26 IST)

நவரசா வெப் தொடரில் பிரமாத நடிப்பு - அவருக்கு ஆஸ்கர் விருதே கொடுக்கலாம்!

நவரசம் எனப்படும் ஒன்பது சுவைகளாகிய பயம், வீரம், இழிப்பு, அற்புதம், இன்பம், அவலம், நகை, கோபம், நடுநிலை ஆகிய ஒன்பது உணர்வுகளை உள்ளடக்கி உருவான வெப் தொடர் "நவரசா". மணிரத்னம் தயாரிப்பில் உருவாகியுள்ள இந்த ஆந்தாலஜி படத்தை 9 பிரபல இயக்குனர்கள் சேர்ந்து இயக்க பிரபல நடிகர்கள் நடித்துள்ளனர். 

இந்த தொடர் ஆகஸ்ட் 6ம் தேதி நெட்பிலிக்சில் வெளியானது. இந்நிலையில் இந்த படத்தை குறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள நடிகையும் சமூக ஆர்வலருமான லட்சுமி ராமகிருஷ்ணன்,  நவரச மனம் வீசுகிறது! இந்த திரைப்படம் எவ்வளவு உண்மையானது என்று சூழலை நன்கு அறிந்தவர்களுக்குத் தெரியும்! அருமையான நிகழ்ச்சிகள், குறிப்பாக வெறுப்பை காட்டக்கூடிய பாயாசம் கதையில்  டெல்லி கணேஷ் ஐயா அவ்வளவு அற்புதமாக நடித்திருக்கிறார்.  அந்த கதாபாத்திரத்திற்காக “ஆஸ்கர் விருது” வழங்க வேண்டும். மக்கள் நுணுக்கங்களை அங்கீகரிப்பார்கள் என்று நம்புகிறேன்! உணர்ச்சி எவ்வளவு நன்றாக வெளிப்படுத்தப்பட்டது! என பாராட்டித்தள்ளியுள்ளார்.