திங்கள், 27 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : புதன், 30 மே 2018 (14:04 IST)

சொல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சிக்கு இடைக்கால தடை விதித்தது உயர்நீதிமன்றம்

பிரபல தனியார் தொலக்காட்சியில் ஒளிப்பரப்பாகும் சொல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சிக்கு இடைக்கால தடை விதித்துள்ளது உயர்நீதிமன்றம்.
 
பிரபல நடிகை லட்சுமி ராமகிருஷ்ணன் தொகுத்து வழங்கும் சொல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சியை முதலில் நிர்மலா பெரியசாமி நடத்தி வந்தார். பொதுமக்களின் குடும்ப பிரச்சனையை பொது மேடையில் வைத்து சரி செய்வதற்காக  நடத்தப்படும் இந்நிகழ்ச்சி பெரும் சர்ச்சைகளில் அவ்வப்போது சிக்கியுள்ளது.
 
இந்த நிலையில் விருதுநகரை சேர்ந்த சோமசுந்தரம் என்பவர் சொல்வதெல்லாம் நிகழ்ச்சி தனிமனித உரிமையில் தலையிடுவது போல் இருப்பதாக உயர்நீதிமன்ற கிளையில் மனு ஒன்று தாக்கல் செய்திருந்தார். 
 
இந்த மனுவை தற்போது விசாரித்த உயர்நீதிமன்றம்  சொல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சிக்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டுள்ளது. மேலும், வழக்கில் அரசு கேபிள் டிவி நிர்வாக இயக்குனர் மற்றும் தனியார் தொலைக்காட்சி நிர்வாக இயக்குனர் பதில் தர ஆணை வெளியிட்டுள்ளது.